Latestமலேசியா

குவாந்தானில் உணவு அனுப்பச் சென்ற பெண் ஆற்றங்கரையில் சடலமாக மீட்பு

குவாந்தான், பிப்ரவரி-14 – பஹாங், குவாந்தான், தஞ்சோங் லும்பூர் பாலமருகேயுள்ள ஆற்றங்கரையில், உணவு வியாபாரி என நம்பப்படும் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் 12.45 மணிக்கு அது குறித்து தகவல் கிடைத்ததாக, குவாந்தான் போலீஸ் தலைவர் ACP Wan Mohd Zahari Wan Busu கூறினார்.

இதையடுத்து போலீஸுடன், தடயவியல் மற்றும் உடல்கூறு நிபுணர்களும் சம்பவ இடம் விரைந்தனர்.

சோதனையில், அப்பெண்ணின் உடலில் காயத் தளும்புகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

37 வயது அப்பெண், முதல் நாள் இரவு 7.30 மணிக்கு cash on delivery முறையில் உணவுப் பொருட்களை அனுப்புவதற்காக சம்பவ இடம் வந்திருந்ததாக, நேரில் பார்த்த சாட்சி ஒருவர் போலீஸிடம் கூறியுள்ளார்.

இதையடுத்து அச்சம்பவம் ஒரு கொலையென வகைப்படுத்தப்பட்டு விசாரணை நடைபெறுவதாக, ACP Zahari கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!