Latestமலேசியா

2024 SPM தேர்வு எழுத 8,000த்திற்கும் மேற்பட்டோர் தவறினர் – கல்வி அமைச்சு

கோலாலம்பூர், பிப் 14 – 2024 ஆம் ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுத அமர்ந்த மாணவர்களில் 8,076 பேர் பிப்ரவரி 6 ஆம் தேதி வரை அனைத்து எழுதப்பட்ட தேர்வுகளிலும் கலந்துகொள்ளவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர்களில் மொத்தம் 6,231 பேர் கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகளிலிருந்து தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் என நாடாளுமன்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட எழத்துப்பூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி வருகை மேலாண்மை விண்ணப்பத்தின் ஆய்வின் அடிப்படையில், 2024 SPM தேர்வின் போது தேர்வு எழுதுவதற்கு மாணவர்கள் இல்லாததற்கு வேலை , குடும்பப் பிரச்னைகள் , உடல்நலப் பிரச்சனைகள் , இறப்பு மற்றும் வெளிநாடுகளுக்குச் செல்வது ஆகியவை முக்கிய காரணங்கள் என தெரிவிக்கப்பட்டது.

தேர்வு எழுதுவதற்கு வராத மாணவர்கள் மற்றும் சிக்கலைத் தீர்ப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கோலா லங்காட் (Kuala Langat) பெரிக்காத்தான் நேசனல் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ டாக்டர் அகமட் யூனுஸ் ஹைரி ( Datuk Dr Ahmad Yunus Hairi ) எழுப்பிய கேள்விக்கு கல்வி அமைச்சு தெரிவித்த பதிலில் இந்த தகவல் இடம் பெற்றது.

SPM தேர்வை எழுதுவதற்கு மாணவர்கள் வராத நிலையை நிவர்த்தி செய்ய பள்ளி அளவிலான தலையீடுகளை எளிதாக்குவதற்காக மாணவர் தரவுத்தள விண்ணப்பத்தில் அவர்களது வருகையை தினசரி கண்காணிப்பது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தியதாக கல்வி அமைச்சு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!