Latestஉலகம்

மலாக்காவில் வான் குடை பயிற்சியின் போது மோட்டார் சைக்கிளோட்டியை மோதிய இராணுவ வீரர்

மலாக்கா, பிப்ரவரி-18 – மலாக்காவில் வான் குடையில் குதிக்கும் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர், சாலையில் போய்க் கொண்டிருந்த மோட்டார் சைக்கிளோட்டியை மோதி காயமடைந்தார்.

Kem Terendak இராணுவ முகாமில் சனிக்கிழமையன்று இச்சம்பவம் நிகழ்ந்தது.

காயமடைந்த வான் குடை வீரர் 29 வயது கார்ப்பரல் Mohd Zahier Zainol Abidin என தெரிவிக்கப்பட்டது.

மசூதி அருகே தரையிறங்கும் நேரத்தில் காற்று திசை மாறியதால், அவர் நிலைத் தடுமாறி மோட்டார் சைக்கிளோட்டியை மோத நேர்ந்தது.

மோட்டார் சைக்கிளோட்டிக்கு அதில் காயமேதும் ஏற்படவில்லை; அவர் உடனடியாக அங்கிருந்து கிளம்பி விட்டார்.

வான் குடை வீரர் சிராய்ப்புக் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பவ வீடியோ முன்னதாக டிக் டோக்கில் வைரலானது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!