
புது டெல்லி, ஏப்ரல்-20, சிறுபான்மையினரைப் பாதுகாக்கத் தொடர்ந்து தவறி வருவதாக, வங்காளதேச இடைக்கால அரசுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஆகக் கடைசியாக முக்கிய இந்து மதத் தலைவர் ஒருவர் அங்கு கடத்தி படுகொலைச் செய்யப்பட்டுள்ளார்.
இது மிகவும் கண்டிக்கத்தக்கது என, இந்திய வெளியுறவு அமைச்சு கடுமையான தொனியில் டாக்காவுக்கு செய்தி அனுப்பியுள்ளது.
இந்துக்கள் உட்பட அனைத்து சிறுபான்மை மக்களையும் காக்க வேண்டியது இடைக்கால அரசின் கடமையாகும்.
அதை விடுத்து ஒவ்வொரு முறையும் சாக்குப் போக்குகளைச் சொல்லி தட்டிக் கழிப்பது கூடாது என புது டெல்லி சாடியது.
வட வங்காள தேசத்தில் செல்வாக்குமிக்க இந்துச் சமூகத் தலைவரான Bhabesh Chandra Roy முன்னதாக, மர்ம நபர்களால் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப்பட்டார்.
அரசியல் நெருக்கடிகள் தணிந்து அந்த தெற்காசிய நாட்டில் மெல்ல அமைதித் திரும்பினாலும், சிறுபான்மையினர் குறிப்பாக இந்துக்களின் மீது வன்முறைத் தாக்குதல்கள் தொடருகின்றன.
மலேசியாவும் ஏற்கனவே இதை கண்டித்தது குறிப்பிடத்தக்கது.