Latestமலேசியா

ChatGPT உங்களை முட்டாளாக்குகிறது; அதனைப் பயன்படுத்துபவர்கள் குறைவாகவே சிந்திப்பதாக ஆய்வில் கண்டறிவு

கோலாலம்பூர், ஜூன்-22 – உலகம் முழுவதும் எழுதுவதற்கான பிரபலமான கருவியாக ChatGPT மாறியுள்ளது.

ஆனால், ChatGPT-யைப் பயன்படுத்துவதால் புத்திசாலித்தனத்தை இழக்கும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

ChatGPT மற்றும் பிற பெரிய மொழி மாடல்களை (LLMs) கட்டுரைகள் எழுத பயன்படுத்தும் மாணவர்கள், AI அதி நவீன தொழில்நுட்பத்தை சாராமல் எழுதும் மாணவர்களுடன் ஒப்பிடும்போது, நினைவுத்திறனும், மூளையின் செயல்பாடும், ஆர்வமும் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

அமெரிக்காவின் MIR எனப்படும் Massachusetts Institute of Technology Media Lab இந்த ஆய்வை நடத்தியது.

54 மாணவர்களை வைத்து மூளையின் மின்சாரச் செயல்பாட்டை அளக்கக்கூடிய ஒரு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அவர்கள் 3 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர் — ஒரு குழு ChatGPT-யை பயன்படுத்தியது, மற்றொன்று Google-லை பயன்படுத்தியது, மூன்றாவது எந்தவித உதவியும் பெறாமல் எழுதியது.

ஆராய்ச்சியாளர்கள், இந்த மாணவர்களின் செயல்திறனையும் அவர்களது மூளையில் 4 மாதங்கள் கழிந்த பிறகு ஏற்பட்ட மாற்றங்களையும் பரிசோதித்தனர்.

அதில், ChatGPT-யை கட்டுரை எழுத பயன்படுத்திய குழுவில், “கணிப்பதற்குரிய தாக்கம்” இருந்தது என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.

அதே நேரத்தில், அந்த குழுவின் “கற்றல் திறனில் சாத்தியமான குறைவு” இருந்ததும் தெரிய வந்தது.

ChatGPT-யைப் பயன்படுத்துவதால் அவர்களது வேலை தரமாகவும் தாக்கத்தோடும் இருந்தது, ஆனால் நீண்ட கால அடிப்படையில், “மூளையை மட்டுமே பயன்படுத்திய குழுவுடன் ஒப்பிடும்போது, நரம்பியல், மொழி மற்றும் மதிப்பீட்டு தரங்களில் எல்லா வகையிலும் இவர்கள் குறைவாகவே செயல்பட்டனர்” என ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

அதுவே மூன்றாவது குழுவை அதாவது எந்தவித உதவியும் பெறாமல் எழுதியவர்களை, ChatGPT பயன்படுத்தி ஒரு கட்டுரை எழுதச் சொன்னபோது, அவர்களின் மூளைச் செயல்பாடு மேலும் உயர்ந்தது என்பது EEG (electroencephalogram) scan மூலம் கண்டறியப்பட்டது.

இதற்கு காரணம், அவர்கள் ChatGPT-யை முழுமையாக சார்ந்துவிடாமல், தங்களது சொந்த அறிவுடன் சேர்த்துப் பயன்படுத்த முயற்சித்ததால் இருக்கலாம்.

ஆனால், ChatGPT-யை தொடர்ந்து பயன்படுத்திய குழுவினர், ஒரு கட்டுரையை சுயமாக எழுதச் சொல்லப்பட்டபோதும், அவர்களின் மூளைச் செயல்பாடு தொடர்ந்து குறைந்து வந்துள்ளதாக ஆய்வு சுட்டிக் காட்டியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!