
கோலாலம்பூர், ஜூலை 11 – கடந்த மாதம் கொலை குற்றவாளி ஒருவன் தப்பிச் செல்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, மலேசிய காவல்துறையில் பணிபுரியும் கார்ப்ரல் முகமது சிஹ்ருலாஸ்லான் முகமது சஃப்ரி இன்று நீதிமன்றத்தில் தனது குற்றத்தை மறுத்துள்ளார்.
கடந்த ஜூன் 29 ஆம் தேதியன்று, கோம்பாக்கிலுள்ள காண்டோமினியத்திற்கு அருகிலிருந்த விளையாட்டு மைதானத்தில், கொலை குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபரை வேண்டுமென்றே கைது செய்யாமல், அவரை தப்பிக்கச் செய்யும் நோக்கில் செயல்பட்ட 35 வயது மதிக்கதக்க முகமது சிஹ்ருலாஸ்லான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நீதிபதியின் முன் இந்தக் குற்றத்தை முற்றிலும் மறுத்த அந்த நபருக்கு நீகிமன்றம் நிபந்தனைகளுடன் கூடிய 7,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்துள்ளது.
தக்க ஆதாரங்களோடு இந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கிப்படுகின்றது.