
கோலாலம்பூர் – ஜூலை 15 – நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது சமூக ஊடக பக்கத்தில், ‘மலேசிய மக்களுக்காக விரைவில் வரவிருக்கும் நற்செய்தி’ என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுவரொட்டி ஒன்றை பதிவேற்றியது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்பைத் தூண்டியுள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தலைமைச் செயலாளர் டான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்காரிடம் கேள்வி எழுப்பியபோது, பிரதமர் வெளியிடவுள்ள அறிவிப்பு மக்களை மகிழ்ச்சியடைய செய்யும் என்று பதிலளித்துள்ளார்.
அதே சுவரொட்டி பொது சேவைத் துறையின் (JPA) அதிகாரப்பூர்வ வலைத்தளத்திலும் பதிவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அரசாங்கம் சரியான நேரத்தில் இந்த அறிவிப்பை வெளியிடுமென்றும் அதுவரை பொதுமக்கள் பொறுமை காக்க வேண்டுமென்றும் ஷம்சுல் கேட்டுக்கொண்டுள்ளார்.