
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 8 – கடந்த மாதம், சீனப் பெண் ஒருவரிடமிருந்து 2.1 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான பொருட்கள் மற்றும் ரொக்கத்தைக் கொள்ளையடித்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட இரண்டு விற்பனையாளர்கள் இன்று நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்துள்ளனர்.
அவ்விருவரும் , தலைமறைவாக இருக்கும் இரண்டு நபர்களுடன் இணைந்து, புக்கிட் டாமன்சாரா பகுதியிலுள்ள அப்பெண்ணின் இல்லத்தில் கொள்ளையடித்துள்ளனர். 1.2 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கடிகாரம், 300 கிராம் எடையுள்ள மூன்று தங்கக் கட்டிகள், 100,000 ரிங்கிட் ரொக்கம், மற்றும் ஐந்து தொலைபேசிகளை அவர்கள் கொள்ளையடித்துள்ளனர்.
குற்றவியல் சட்டத்தின் பதிவுச் செய்யப்பட்ட இக்குற்றம் நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், சவுக்கடி தண்டனையும் விதிக்கப்படுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் ஒவ்வொரு குற்றவாளிக்கும் உத்தரவாதத்துடன் கூடிய 15,000 ரிங்கிட் ஜாமீன் வழங்கபட்டத்தைத் தொடர்ந்து இந்த வழக்கு செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.