
கோலாலம்பூர், ஆகஸ்ட்-26 – முன்னாள் பொருளாதார அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியின் மனைவிக்கு மிரட்டல் செய்தி அனுப்ப பயன்படுத்தப்பட்ட தொலைபேசி எண், வெளிநாட்டு நபரின் பெயரில் பதிவுச் செய்யப்பட்டுள்ளதை போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.
அந்த நபரை அடையாளம் காண வெளிநாட்டு அமைப்புகளின் உதவி கோரப்பட்டுள்ளதாகவும், விரைவில் தகவல் கிடைக்கும் என நம்புவதாகவும், தேசியப் போலீஸ் படைத் தலைவர் டத்தோ ஸ்ரீ Mohd Khalid Ismail கூறினார்.
இவ்வேளையில் ஆகஸ்ட் 13-ம் தேதி புத்ராஜெயா பேரங்காடியில் ரஃபிசியின் 12 வயது மகன் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் மர்ம ஊசியால் தாக்கிய சம்பவம் குறித்த இரசாயன பரிசோதனை அறிக்கை இன்னும் வரவில்லை என்றார் அவர்.
விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக அவர் சொன்னார்.
அமைச்சரவையிலிருந்து முக்கிய விவகாரங்கள் குறித்து பேசுவதிலிருந்து தமது வாயை அடைக்க மேற்கொள்ளப்பட்ட மிரட்டல் முயற்சியே அதுவென ரஃபிசி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.