
கோலாலம்பூர் – ஆகஸ்ட் 29 – ஜோகூரில் இன்று அதிகாலை மணி 4.24க்கு சிறிய நிலநடுக்கம் உணரப்பட்டது. இது Segamat பகுதியில் அண்மையில் ஏற்பட்ட தொடர்ச்சியான நில அதிர்வு நிகழ்வுகளில் 5 ஆவது ஆகும் . செகமாட்டில் இருநது 22 கிலோமீட்டர் வடகிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரெக்டர் கருவியில் 3.4அளவில் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாக மெட் மலேசியா எனப்படும் மலேசிய வானிலை ஆய்வுத்துறை தெரிவித்துள்ளது. நிலைமையை மெட் மலேசியா தொடர்ந்து கண்காணிக்கும்.
நேற்று வியாழக்கிழமை இரவு மணி 7. 56 அளவில் செகாமட்டில் இருந்து வடக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரெக்டர் கருவியில் 2.5 அளவில் நில அதிர்வு உணரப்பட்டது. புதன்கிழமை, செகமாட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ரெக்டர் கருவியில் 3.2 அளவில் பதிவான சிறிய நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும் எவரும் காயம் அடையவோ அல்லது எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை. காலை 8.59 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் செகாமட் அருகே மையம் கொண்டு ஜோகூர் மற்றும் பஹாங்கின் தென் பகுதிகளில் சில இடங்களில உணரப்பட்டது. கடந்த ஞாயிற்றுக் கிழமையும் சிகமட் வட்டாரத்தில் இரண்டு நில நடுக்கங்கள் ஏற்பட்டன.