
செகாமட் – ஆகஸ்ட் 30 – இன்று காலை செகாமட் மாவட்டத்தில் மீண்டும் 2.7 ரிக்டர் அளவிலான லேசான நிலநடுக்கம் ஏற்பட்டு, அப்பகுதி மக்களை பெரும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. இது, கடந்த எட்டு நாட்களில் அந்தப் பகுதியில் பதிவாகிய மற்றொரு நிலநடுக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலநடுக்கத்தின் மையம் 2.5 டிகிரி வடக்கு மற்றும் 102.8 டிகிரி கிழக்கு இணைக்கோட்டில், சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்ததாக மலேசிய வானிலை ஆய்வுத் துறை (MetMalaysia) தெரிவித்துள்ளது.
முன்னதாக, ஆகஸ்ட் 24 ஆம் தேதியன்று 4.1 ரிக்டர் அளவுகோலிலும், பின்பு புதன்கிழமை 3.2 ரிக்டர் அளவுகோலிலும், அதே நாள் மாலை 2.5 ரிக்டர் அளவிலும் பின்பு வியாழக்கிழமை அதிகாலை 3.4 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கங்கள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.