
பட்டர்வொர்த், செப்டம்பர் 9 – நேற்று, பட்டர்வொர்த் மாக் மண்டினில் தனது சொந்த தாயை தாக்கி, கண்களை குத்தியதாகக் கூறப்படும் 47 வயது ஆடவனுக்கு 4 நாட்கள் தடுப்பு காவல் விதிக்கப்பட்டது.
72 வயது முதிய பெண் தனது அருகிலுள்ள பள்ளிவாசலில் மதப்பாட வகுப்பு முடித்து வீடு திரும்பியபோது, அவரது மகனால் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து போலீசாருக்கு புகார் வந்தது.
சந்தேக நபர் தனது தாயை வீட்டிலிருந்து வெளியேற்றிய பின்பு, கூர்மையான பொருளால் தாக்கி, அவரின் கண்ணைக் குத்தியதால் பாதிக்கப்பட்டவரின் உடலில் பல்வேறு காயங்கள் ஏற்பட்டிருந்தன.
போலீசார் சம்பவ இடத்திலேயே சந்தேக நபரை கைது செய்து பின்னர் சிறுநீர் பரிசோதனையை மேற்கொண்டபோது அவன் போதைப்பொருள் உட்கொண்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
மேலும், அந்த நபர் செப்டம்பர் 2 ஆம் தேதியன்று, தேசிய போதைப்பொருள் தடுப்பு அமைப்பு (AADK) கண்காணிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது.