
புத்ராஜெயா, செப்டம்பர்-24,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC-யில் பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில், அரசாங்கத் துணைத் தலைமை வழக்கறிஞர் ஒருவர் கைதாகியுள்ளார்.
அந்த அதிகாரி நேற்று அவரது வீட்டில் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டதை MACC உறுதிப்படுத்தியது.
போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் பொருட்களும் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவம் குறித்த விசாரணையை போலீஸாரிடமே ஒப்படைத்துள்ளதாக MACC, அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
எந்தச் சூழ்நிலையிலும், தவறான நடத்தை, சட்ட மீறல் அல்லது குற்றச் செயலுடன் MACC சமரசம் செய்யாது என்று அறிக்கை வாயிலாக அது வலியுறுத்தியது.
இவ்வேளையில், அச்சம்பவம் 1952-ஆம் ஆண்டு அபாயகர போதைப் பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக, புக்கிட் அமான் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறையின் இயகுநர் டத்தோ ஹுசேய்ன் ஓமார் கான், கூறினார்.
கைதான அதிகாரி 3 நாட்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.