Latestமலேசியா

4 போலீஸ்காரர்களை கொல்ல முயன்ற குற்றச்சாட்டை ஆடவன் மறுத்தான்

கோலாலாம்பூர், செப் -26,

பேராக்கின் பெஹ்ராங்கில் துப்பாக்கிச் சூடு நடத்தியது மற்றும் அதிகாரிகளை தாக்க முயற்சித்ததைக் கண்ட போலீசாருடன் 60 கிலோமீட்டர் தூரம் துரத்தப்பட்ட பிறகு கைது செய்யப்பட்ட ஆடவன் மீது கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை அவன் மறுத்தான். தெலுக் இந்தான் செஷன்ஸ் நீதிமன்றத்தில் நீதிபதி நோர்ஹிமிசா ஷைபுதீன் ( Norhimizah Shaiffuddin) முன்னிலையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட பிறகு, 35 வயதான அமிருல் அஸ்ராப் சைபுல் குற்றச்சாட்டை மறுத்தார். அஜிசுல் யஹ்யா, ( Azizul Yahya), லோக்மான் நுல்ஹக்கிம் மாட்ஷிர் ( Lokman Nulhakim Mahdir), S . முனிய கவுண்டன் (Muniya Kaunden) மற்றும் நோர் அஷாம் மான் ( Noor Azam Man) ஆகியோரை கொலை செய்ய முயன்றதாக 5 குழந்தைகளின் தந்தையான அமிருல் குற்றஞ்சாட்டப்பட்டது.

செப்டம்பர் 20 ஆம் தேதி காலை 11 மணியளவில் வடக்கு-தெற்கு விரைவுச் சாலையில் தெற்கு நோக்கிச் செல்லும் பெஹ்ராங் ஓய்வு நிறுத்தத்தில் உள்ள பெட்ரோல் நிலையத்திற்கு அருகில் அந்த நபர் இக்குற்றத்தை புரிந்தாக கூறப்பட்டது. குற்றவியல் சட்டத்தின் 307 ஆவது பிரிவு (1) இன் கீழ் அமிருல் மீது கொண்டுவரப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க வகை செய்கிறது. அவருக்கு 10,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டதோடு மாதத்திற்கு ஒரு முறை அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!