
கிராண்ட் பிளாங்க் (மிச்சிகன்), செப்டம்பர்-29,
அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலம் கிராண்ட் பிளாங்க் நகர்ப் பகுதியில் உள்ள மோர்மன் (Mormon) தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது இருவர் உயிரிழந்தனர்.
குழந்தைகள் உட்பட 8 பேர் காயமுற்றனர்.
அருகிலுள்ள நகரத்தைச் சேர்ந்த 40 வயது ஆண், தேவாலயத்தில் தனது வாகனத்தை மோதி நுழைந்த பின், துப்பாக்கியால் சுடத் தொடங்கினான்.
அதன்பின் அவன் தேவாலயத்திற்குத் தீ வைத்ததாக போலீஸார் கூறினர்.
சம்பவம் நடந்த போது நூற்றுக்கணக்கானோர் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தனர்.
துப்பாக்கிச் சூடு பட்டவர்களில் 9 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
சந்தேக நபரை, போரீஸார் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றனர்.
அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் இத்தாக்குதலை “மிகவும் கொடூரமானது” எனக் கண்டித்து, அமெரிக்க கிறிஸ்தவர்களை குறி வைத்து நடக்கும் வன்முறையின் ஒரு பகுதியே என தெரிவித்தார்.
உதவி கேட்டு அலறும் சத்தத்தையும், தீப்பிடித்த தேவாலயத்தில் இருந்து கரும் புகை எழுந்ததையும் வைரலான வீயோக்களில் காண முடிந்தது.
அத்தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.