ஊழலைத் துடைத்தொழிக்க 2-3 ஆண்டுகள் கொடுங்கள், குறிப்பாக ‘பெரிய மீன்களை’ பிடிக்க…அன்வார் பேச்சு

கோலாலம்பூர், அக்டோபர்-1,
நாட்டில் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட முக்கியப் புள்ளிகள்
தொடர்பான ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோக புகார்களை 2 முதல் 3 ஆண்டுகளில் சுத்தம் செய்வதை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இலக்காகக் கொண்டுள்ளார்.
அவ்வகையில் முன்னாள் அமைச்சர்கள் உட்பட, அதிகாரத்தில் இருந்தபோது ஊழலில் ஈடுபட்டவர்கள், ஓய்வு பெற்றிருந்தாலும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்கள்.
சிறிய அளவிலான ஊழலுக்குக் கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறபோது, பெரிய ஊழல்களை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறினார்.
அதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC போன்ற அமுலாக்க அமைப்புகளை வலுப்படுத்தவும் அன்வார் பரிந்துரைத்தார்.
ஆனால், இந்த ‘பெரிய மீன்கள்’ அதிக செல்வாக்கும் நிதிபலமும் கொண்டுள்ளதால், அவர்களைச் சட்டத்தின் முன் கொண்டுவருவது சவாலாக இருப்பதை அன்வார் ஒப்புக் கொண்டார்.
என்றாலும், ஊழல் ஒழிப்பில் MACC மற்றும் போலீஸ் தற்போது காட்டி வரும் துணிவு, நாட்டின் வரலாற்றில் மிகப் பெரிய முன்னேற்றம் என அவர் பாராட்டினார்.