
பொந்தியான், அக் 16 –
பொந்தியான் மாவட்டத்திலுள்ள உடம்புப் பிடி
நிலையங்கள் மற்றும் கால் பாதங்களை பிடித்துவிடும் நிலையங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
மூன்று உடம்புப் பிடி நிலையங்கள் மற்றும் கால் பாதம் பிடிப்பு வளாகங்களில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஜோகூர் குடிநுழைவுத்துறை இயக்குநர் டத்தோ முகமட் ருஸ்டி முகமட் டாருஸ் (Mohd Rusdi Mohd Darusகுடி) கூறினார்.
இந்த உடம்பிடி நிலையங்களில் உரிமையாளர்கள் செல்லுபடியாகும் ஆவணங்கள் இல்லாமல் வெளிநாட்டினரை வேலைக்கு அமர்த்தியதாகவும், சமூக வருகை அட்டைகளை தவறாகப் பயன்படுத்தியதாகவும் சந்தேகிக்கப்பட்டதை தொடர்ந்து 15 வெளிநாட்டினருடன் வளாகத்தின் பராமரிப்பாளர்கள் மற்றும் மேலாளர்கள் என்று நம்பப்படும் இரண்டு உள்ளூர்வாசிகள் கைது செய்யப்பட்டனர்.
வெளிநாட்டினர் அனைவரும் மேல் விசாரணைக்காக Setia Tropika குடிநுழைவு தடுப்பு முகாமிற்கு கொண்டுச் செல்லப்பட்டனர் . பயண பாஸ்களை தவறாகப் பயன்படுத்துவது மற்றும் ஒழுக்கக்கேடான செயல்களை எதிர்த்துப் போராடுவதில் ஜோகூர் குடிநுழைவுத்துறை தீவிரமாக உள்ளது என்பதை இந்த சோதனை நிரூபித்ததாக முகமட் ருஸ்டி வலியுறுத்தினார்.