
புக்கிட் காயு ஹீத்தாம், அக்டோபர்-26,
“முக்கியமான நிகழ்ச்சியில்” கலந்துகொள்வதற்காக வந்திருப்பதாகக் கூறி நாட்டுக்குள் நுழைய முயன்ற 6 வங்காளதேசிகள், புக்கிட் காயு ஹீத்தாமில், குடிநுழைவு அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
கருப்பு ‘கோர்ட் சூட்’ உடை அணிந்த 4 ஆடவர்களும் ஒரு பெண்ணும் மற்றும் சேலை அணிந்த இன்னொரு பெண்ணுக்குமே அனுமதி மறுக்கப்பட்டது.
30 முதல் 50 வயதுக்குட்பட்ட அக்கும்பல் சோதனைச் சாவடியில் தரைவழியாக வந்திறங்கினர்.
எனினும் அவர்களின் பயண நோக்கம் சந்தேகத்திற்குரியதாக இருந்ததை கண்ட எல்லைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள், அவர்கள் மலேசியாவுக்குள் நுழைவதற்கான தேவைகளைப் பூர்த்திச் செய்யவில்லை என கண்டறிந்தனர்.
அதோடு அவர்கள் உண்மையான சுற்றுப்பயணிகள் அல்லர் என்பதும் உறுதியானது.
இதையடுத்து, வந்த வழியே தங்கள் சொந்த நாட்டிற்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.



