
ஷா ஆலாம், நவம்பர்-1,
சிலாங்கூர், ஷா ஆலாமில் உள்ள ஓர் இடைநிலைப் பள்ளியில் காதல் தோல்வியால் மனமுடைந்து போயிருந்த முதலாம் படிவ மாணவி, முதல் மாடியிலிருந்து விழுந்து காயமடைந்தார்.
வியாழக்கிழமை நிகழ்ந்த அச்சம்பவத்தில், அம்மாணவிக்கு நெற்றியிலும் காலிலும் காயமேற்பட்டது.
எனினும் அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக, ஷா ஆலாம் போலீஸ் தலைர் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.
அதே பள்ளியில் இரண்டாம் படிவத்தில் பயிலும் காதலனுடனான உறவு முறிந்ததால், அம்மாணவி கடும் மனஉளைச்சலில் இருந்தது போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து பகடிவதை கோணத்தில் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.



