Latestமலேசியா

1,000 ஆலயங்களுக்கு மேம்பாட்டு நிதி ரி.ம 2கோடி: மதானி அரசுக்கு குணராஜ் பாராட்டு!

கோலாலம்பூர், நவ 4 –

இந்து சமய வழிபாட்டு தலங்கள் சமுதாய மையங்களாக உருமாற வேண்டும் என்னும் இலக்கிற்கு ஏற்பவும் அதற்கு ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் மதானி அரசாங்கம் தேசிய அளவில் ஆயிரம் ஆலயங்களுக்கு 20ஆயிரம் ரிங்கிட் வீதம் 2 கோடி ரிங்கிட்டை நிதியாக அளிக்க முன்வந்ததற்கு செந்தோசா வாக்காளர்கள் மற்றும் மலேசிய இந்துக்களின் சார்பில் நன்றியும் பாராட்டும் தெரிவிப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் தெரிவித்துள்ளார்.

டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கம் இந்து சமய மறுமலர்ச்சிக்காக இந்த நிதியை ஒதுக்கியிருப்பது வரவேற்கக்கூடிய ஒன்றாகும்.

இது, ஆலயங்களுக்கான நிதி உதவியாக மட்டுமின்றி , இதன்மூலம் சமூக நலன், கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தலாம் என இன்று வெளியிட்ட அறிக்கையில் குணராஜ் தெரிவித்தார்.

இந்த நிதியை சரியான முறையில் பயன்படுத்துவது மிகவும் முக்கியமாகும். 20 ஆயிரம் ரிங்கிட்டை பெறும் ஒவ்வொரு ஆலயமும் , அந்த நிதியில் இருந்து பத்தில் ஒரு பங்காக 2,000 ரிங்கிட்டை சமய ,சமூக நலம் கருதி நன்கொடை வழங்க முன்வந்தால், 1000 ஆலயங்களும் இணைந்து 2 மில்லியன் ரிங்கிட்டை திரட்ட முடியும்.

இதன்வழி பல்வேறு பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் மக்கள் பயன் அடைய முடியும் என குணராஜ் சுட்டிக்காட்டினார். இந்த முயற்சிக்கு 2026 ஆம் ஆண்டு நல்ல தொடக்கமாக அமைய வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!