பாதிரியர் கோ, அம்ரில் சே மாட் மீதான நீதிமன்ற முடிவுக்கு எதிராக சட்டத்துறை அலுவலகம் மேல் முறையீடு செய்யும்

கோலாலம்பூர் , நவ 6 – காணாமல்போன பாதிரியர் ரேய்மண்ட் கோ ( Raymond Koh ) மற்றும் தன்னார்வ செயற்பாட்டாளர் அம்ரில் சே மாட் ( Amril Che Mat ) ஆகியோரின் குடும்பங்களுக்கு மொத்தம் 40 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை அரசாங்கமும் போலீஸ் துறையும் வழங்குவதற்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகளை எதிர்த்து சட்டத்துறை தலைவரின் அலுவலகம் மேல்முறையீடு செய்யும்.
நீதிமன்றத்தின் தீர்ப்புகளை மறுஆய்வு செய்த பிறகு மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முறையீடு செய்வதற்கு முடிவு செய்துள்ளதாக சட்டத்துறை தலைவரின் அலுவலகம் இன்று தனித்தனி அறிக்கைகளில் தெரிவித்துள்ளது.
தற்போதைய மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகளான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பிரதிவாதிகள் கோவின் கடத்தலில் ஈடுபட்டதாகவும், எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உத்தரவுகளின் கீழ் செயல்பட்டதாகவும் நீதிபதி Su Tiang Joo தீர்ப்பளித்தார்.
மேலும் அம்ரி காணாமல் போனது குறித்து முறையான விசாரணைகளை நடத்தத் தவறியதற்காக அரசாங்கமும் போலீஸ் துறையும் அவரது குடும்பத்தினருக்கு 3 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.
கோவின் கடத்தலில் அரசாங்கம் மற்றும் போலீஸ் தொடர்பினால் கோவின் குடும்பத்திற்கு 37 மில்லியன் ரிங்கிட்டிக்கும் மேலான தொகையை இழப்பீடு வழங்க கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 2017ஆம் ஆண்டு
2017ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதியன்று பெட்டாலிங் ஜெயாவில் ஜாலான் SS4B/10 இல் காரில் சென்று கொண்டிருந்தபோது கோ கடத்தப்பட்டார்.
விசாரணையின் போது, கருப்பு இராணுவ உடையில் முகமூடி அணிந்த ஐந்து பேர் கோவை அவரது காரிலிருந்து வெளியே இழுத்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
Perlis Hope என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தோற்றுவிப்பாளருமான அம்ரி, 2016 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம்தேதி இரவு சுமார் 11.30 மணியளவில் தனது வீட்டை விட்டு வெளியேறினார். அவரது கார் மறுநாள் அதிகாலை பெர்லிஸில் உள்ள புக்கிட் கபாங் ( Gabang ) விளையாட்டுப் பள்ளியில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.



