
குவாந்தான், நவம்பர் 11 – குவாந்தான் பெந்தோங் பகுதியில், ECRL ரயில் பாதை கட்டுமான பணியிடத்தின் அருகே மர்ம நபர் ஒருவர் சுமார் 240 கிலோ கிராம் எடையுள்ள, 5.34 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான கஞ்சா வகை போதை பொருளை காரில் விட்டு சென்றதையடுத்து போலீசார் அதனைப் பறிமுதல் செய்தனர்.
போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றவுடனேயே, சம்பவ இடத்திற்கு விரைந்து சம்பந்தப்பட்ட காரை பரிசோதனை செய்த போது 120 கஞ்சா பொட்டலங்களும், 120 கஞ்சா பூக்கள் கொண்ட பொட்டலங்களும் கண்டறியப்பட்டது.
தற்போது அந்த வாகன உரிமையாளரைப் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் போலீசார் போதைப்பொருளை இவ்வாறு விட்டு சென்றதற்கான காரணத்தை ஆராய்ந்து வருவதோடு, இது கடத்தல் நடவடிக்கையாக இருக்கலாமென சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கு ஆபத்தான போதைப்பொருள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதல் தகவல் தெரிந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாரைத் தொடர்புக்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.



