
புத்ராஜெயா, நவம்பர்-12, நாட்டின் அமைதியையும் ஒற்றுமையையும் எளிதில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என மக்களுக்கு பிரதமர் அறைக்கூவல் விடுத்துள்ளார்.
“நாம் அடைந்த அமைதி, ஒற்றுமை, வளர்ச்சி — இவை எல்லாம் சாதாரண விஷயங்கள் அல்ல; அவற்றைப் பாதுகாக்க நாம் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்” என்றார் அவர்.
புத்ராஜெயாவில் நடைபெற்ற பிரதமர் துறை ஊழியர்களுடன் சந்திப்பில், டத்தோ ஸ்ரீ அன்வார் அவ்வாறு கூறினார்.
மலேசியா பல இனங்கள், மதங்கள், மாநிலங்களைக் கொண்ட நாடாக இருந்தும், அற்புதமான அமைதியை அனுபவிக்கிறது.
ஆனால் பல நாடுகள் இதே பன்முக சமூகத்துடன் இருந்தாலும், உள்நாட்டு குழப்பங்கள், இனவாதம், மதவாதம் போன்ற பிரச்சனைகளை எதிர்கொள்கின்றன.
ஆகவே மலேசியர்களாகிய நாம் கொடுத்து வைத்தவர்கள் எனக் குறிப்பிட்ட அன்வார், அந்த ஒற்றுமையை நாம் பாதுகாக்க வேண்டும். இது நாட்டின் அரசியல் நிலைத்தன்மைக்கும், பொருளாதார வளர்ச்சிக்கும் அடிப்படை என்றார்.



