
புத்ராஜெயா, நவம்பர் 12 – மலேசிய காவல்துறை (PDRM) சர்வதேச அளவிலான பாதுகாப்பு மேலாண்மையில் அமெரிக்கா போன்ற முன்னணி நாடுகளுக்கு இணையாகச் செயல்படுவதாக உள்துறை அமைச்சர் டத்தோ’ ஸ்ரீ சைஃபுடீன் நசூஷியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismail) தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ஆசியான் உச்ச மாநாட்டின் போது, அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் உட்பட உயர்நிலை விருந்தினர்களின் பாதுகாப்பை PDRM மிகுந்த திறமையுடன் கையாண்டது.
அமெரிக்க ரகசிய சேவை (Secret Service) உடனான ஒத்துழைப்பிலும், இறுதி பாதுகாப்பு முடிவுகள் முழுமையாக PDRM கையிலேயே இருந்ததெனவும் அவர் குறிப்பிட்டார்.
மாநாட்டிற்கு முன் PDRM தயாரித்த விரிவான பாதுகாப்பு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு வழித்தடங்கள் யாவும், அமெரிக்க பாதுகாப்பு அணியால் அங்கீகரிக்கப்பட்டது. இதுவே மலேசிய பாதுகாப்பு அமைப்பின் சர்வதேச தரத்தைக் காட்டுகின்றதென அவர் வலியுறுத்தி கூறினார்.



