தேசிய ஒருமைப்பாடு ஆலோசனை மன்ற செயற்குழுவில் ஒரே இந்தியராக தனேஷ் பேசில் நியமனம்

கோலாலம்பூர், டிசம்பர்-3,
மலேசிய இந்திய இளைஞர் மன்றமான MIYC-யின் தலைவரும் மலேசிய இளைஞர் மன்றத்தின் துணைத் தலைவருமானா தனேஷ் பேசில் (Danesh Basil), தேசிய ஒருமைப்பாடு ஆலோசனை மன்றத்தின் (MPPN) செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பதவிக்கு நியமிக்கப்பட்ட ஒரே இந்தியராக அவர் உள்ளார்.
இந்த நியமனம், மலேசிய இந்திய இளைஞர் மன்றத்திற்கும், நாட்டின் அனைத்து இளைஞர்களுக்கும் மிகப் பெரிய மரியாதையும் பெருமையும் ஆகும் என, MIYC அறிக்கையொன்றில் கூறியது.
இளைஞர்களின் கருத்துக்கள், தேவைகள் மற்றும் எதிர்காலக் கனவுகள் அரசாங்கக் கொள்கைகளில் பிரதிபலிக்க வாய்ப்பளிக்கும் முக்கிய அங்கீகாரமாக இது பார்க்கப்படுகிறது.
தனேஷ் பேசிலின் நியமனம், இந்திய இளைஞர்கள் தேசிய தளங்களில் தவிர்க்க முடியாத இடத்தைப் பிடித்து வருகிறார்கள் என்பதற்கான சான்றாகும்.
நாட்டின் ஒற்றுமை, சமூக நல்லிணக்கம் மற்றும் நிலையான முன்னேற்றத்தை வலுப்படுத்தும் நோக்கில் அவர் இளைஞர்களின் குரலை வெளிப்படுத்தும் பொறுப்பை ஏற்கிறார் என MIYC வருணித்தது.



