Latestமலேசியா

மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா

அம்பாங், பிப்ரவரி-6-அம்பாங், தாசேக் பெர்மாயில் 25 ஆண்டுகளாக பல்வேறு சேவைகளுடன் செயல்பட்டு வருகிறது மலேசிய ஸ்ரீ ஆதிசங்கரர் திருமடம்.

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சிகள், அர்ச்சகர் பயிற்சிகள் போன்றவையும் அவற்றிலடங்கும்.

இந்நிலையில் இத்திருமடத்தின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா அண்மையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக டத்தோ A.P சிவம், மலேசிய இந்து சங்கத்தின் தேசியத் தலைவர் தங்க கணேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

வெள்ளி விழாவைக் குறிக்கும் வகையில் 25 பேருக்கு ‘சங்கர சேவை ரத்னா’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதோடு, வசதி குறைந்த 25 மாணவர்களுக்கு தலா RM 50 நிதியுதவியும், 25 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்களும் வழங்கப்பட்டதாக, மலேசிய ஸ்ரீ ஆதிசங்கர் திருமடத்தின் தோற்றுநர் சுவாமி மகேந்திரர் வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.

இசை, ஆன்மிகம், சமூக சேவை ஆகியவற்றை ஒருங்கிணைத்த இந்த விழா, சமூக ஒற்றுமையையும் சேவையின் மதிப்பையும் வலியுறுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!