Latestஉலகம்

வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்த விபத்து; 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் பலி

வியட்னாம், ஜூலை 11 – வியட்நாமின் தெற்கு பகுதியில் உள்ள பு குவோக் தீவு அருகே வேகப் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 15 இந்திய சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர்.

32 இந்திய சுற்றுலாப் பயணிகள் மற்றும் 4 பணியாளர்களுடன் சென்ற அந்தப் படகு, கடலில் கவிழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மீட்புப் பணிகளில் 21 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.

விபத்துக்கான காரணம் குறித்து வியட்நாம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில் கடல் சீற்றம் காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!