
உரிமம் இல்லாமல் அடுக்ககத்தில் பட்டாசு வைத்திருந்த வர்த்தகர்
கைது
பாங்கி, பிப்ரவரி 9
உரிமம் இல்லாமல் பட்டாசுகளை சேமித்து வைத்திருந்ததாக நம்பப்படும் உள்ளூர் வர்த்தகரை போலீசார் கைது செய்தனர். இதனால் பாங்கியில் உள்ள ஒரு அடுக்ககம் ஒன்றில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைக்கு உதவுவதற்காக பாங்கி வட்டாரத்தில் இன்று மதியம் மணி 12.17க்கு 33 வயது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக காஜாங் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் நஸ்ரோன் அப்துல் யூசோப் ( Nazron Abdul Yusof )தெரிவித்தார்.
பட்டாசுப் பெட்டிகள் வெடித்ததால் தீ விபத்து ஏற்பட்டது என தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. உரிமம் அல்லது அனுமதி இல்லாமல் அந்த அடுக்கு மாடி வீட்டின் குத்தகைதாரர் விற்பனைக்காக பட்டாசு வாங்கி சேமித்து வைத்திருந்தார் என்று இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் Nazron குறிப்பிட்டார்.
தீயினால் அடுக்கு மாடி வீடு முழுவதும் எரிந்து சேதமடைந்ததோடு , மொத்த இழப்பு குறித்து இன்னும் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேக நபர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டு தடுத்துவைக்கும் உத்தரவு பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.



