
கே.எல்,ஐ ஏவில் அந்நியரின் பையை எடுத்துச் செல்ல பயணி மறுப்பு பாதுகாப்பு
எச்சரிக்கையை ஏற்படுத்தும் வீடியோ
கோலாலம்பூர், பிப்ரவரி 13 –
கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமான KLIA வில் பெண் ஒருவர் பயணியை அணுகி தனது பையை பாதுகாப்பு சோதனைச் சாவடி வழியாக எடுத்துச் செல்ல உதவி கேட்பதாகக் காட்டப்படும் காணொளி த்ரெட்ஸில்
(Threads ) வைரலாகி வருகிறது. இருப்பினும் அந்த பயணி அந்த கோரிக்கையை மறுத்துவிட்டு நேரடியாக அவர் புறப்படும் வாயிலுக்கு சென்றார்.
அவரது இந்த செயல் இணையப் பயனர்களிடையே பொது விழிப்புணர்வையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே இந்த காணொளி தொடர்பாக பலர் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர். அந்நியருக்கு உதவ முடியாத பயணியின் முடிவை டிடிஎம்போக் (Didie Embok) என்று கூறிக்கொண்ட விமான நிலைய ஊழியர் பாராட்டினார்.
விமான நிலையங்களில் அந்நியர்கள் அணுகும்போது ஒரு போதும் உதவ வேண்டாம் என பயணிகளை மற்றொரு நெட்டிசனான ஹலிமாதொன்சாடியா (Halimahtonsaadiah )
எச்சரித்தார். தங்களது பையை வைத்திருக்கவோ அல்லது அதனை பார்க்கவோ ,கேட்டால்கூட வேண்டாம் என்று சொல்லி விடவேண்டும். அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியாது.
அது போதைப்பொருள் அல்லது சட்டவிரோதமான வேறு பொருளாகக் கூட இருக்கலாம். நீங்கள் சந்தேகத்திற்கு இடமில்லாத போதைப்பொருள் கடத்தும் கும்பலின் உறுப்பினராக மாறக்கூடிய அபாயம் இருப்பதால் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அவர் கருத்துரைத்தார்.
26 வினாடிகள் கொண்ட இந்த காணொளி பயணிகள் விழிப்புடன் இருக்கவும், இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டால் உடனடியாக விமான நிலைய அதிகாரிகள், காவல்துறை அல்லது குடிநுழைவு அதிகாரிகளுக்கு எச்சரிக்கை செய்யவும் நினைவூட்டுகிறது.



