
எலும்பு முறியாத வரை குடும்ப வன்முறைக்கு அனுமதி; தாலிபான் அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய புதியச் சட்டம்
காபூல், பிப்ரவரி-19,
ஆப்கானிஸ்தானில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குடும்ப வன்முறையை அனுமதிக்கும் சர்ச்சைக்குரிய புதியச் சட்டத்தை, தாலிபான் அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது
கணவன்மார்கள், மனைவியையும் குழந்தைகளையும் அடிக்கலாம்… ஆனால் எலும்பு முறியக் கூடாது அல்லது வெளிப்படையான காயம் இல்லாமல் இருக்க வேண்டும் என, 90 பக்கங்களைக் கொண்ட புதிய குற்றவியல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறையில் கடுமையான காயம் ஏற்பட்டால் அதிகபட்ச தண்டனையே 15 நாட்கள் சிறை தான் என்பது அதை விட மோசமாகும்.
அது கூட, கணவன் சித்ரவதை செய்தார் என்பதை ஆதாரப் பூர்வமாக மானைவி நிரூபித்தால் மட்டுமே கணவன் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுவாராம்.
எங்கும் இல்லாத இந்த ‘விநோத’ சட்டத்தில் தாலிபான் உச்சத் தலைவர் Hibatullah Akhundzada கையெழுத்திட்டுள்ளார்.
இவற்றுக்கு எல்லாம் மேலாக, சாதிய ரீதி போன்று “சுதந்திரமாக இருப்பவர்” மற்றும் “அடிமை” என பிரித்து தண்டனைகள் வேறுபடுத்தப்பட்டுள்ளன.
ஏற்கனவே பெண்களை கல்வியிலும் சமூக அந்தஸ்திலும் மட்டம் தட்டும் தாலிபான் அரசின் இப்புதிய நடவடிக்கைக்கு
உலகளாவிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
மனித உரிமை அமைப்புகள், இதை வன்முறைக்கு வழங்கப்படும் சட்டப்பூர்வ அங்கீகாரம் எனக் கண்டித்து வருகின்றன.



