Latestமலேசியா

Hollywood Walk of Fame- இல் மிச்சேல் யோவுக்கு சிறந்த நட்சத்திர விருது

Hollywood Walk of Fame- இல் மிச்சேல் யோவுக்கு சிறந்த நட்சத்திர விருது

பிப்ரவரி-19,

மலேசியாவில் பிறந்த உலகப் புகழ் பெற்ற நடிகையான 64 வயதுடைய மிச்சேல் யோ (Michelle Yeoh) ஹாலிவுட்டில் முக்கியமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் அமைந்துள்ள Hollywood Walk of Fame-இல் அவருக்கு சிறப்பு நட்சத்திர விருது வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இது தனக்கு நம்ப முடியாத மகிழ்ச்சி என்றும் இந்த கௌரவம் தன் குடும்பத்தினரும், தனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் சொந்தமானது என்றும் கூறினார். இந்த சாதனையை தனது தாயாருக்கும் மறைந்த தந்தைக்கும் அர்ப்பணிப்பதாக கூறினார்.

1990களில் ஹாங்காங் ஆக்‌ஷன் திரைப்படங்கள் மூலம் தனது நடிப்புப் பயணத்தைத் தொடங்கிய மிச்சேல் யோ, பின்னர் உலகளவில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2023ஆம் ஆண்டு வெளியான Everything Everywhere All at Once திரைப்படத்திற்காக சிறந்த நடிகைக்கான Academy Award for Best Actress விருதை வென்ற முதல் ஆசிய நடிகையாக அவர் வரலாறு படைத்தார்.

Crouching Tiger, Hidden Dragon, Tomorrow Never Dies, Crazy Rich Asians உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களிலும் அவர் நடித்துள்ளார்.இந்த சாதனை மலேசியாவுக்கு பெருமை சேர்த்ததுடன், இளம் தலைமுறைக்கு ஊக்கமாகவும் உள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!