Latestஇந்தியா

நான், சப்பாத்தி, தோசை, தே தாரேக்; தமிழகத்தில் மிஸ்புனின் ரமலான் உணவு

மதுரை, பிப்ரவரி-20-முதன் முறையாக வெளிநாட்டில் பயிற்சியளிக்கச் சென்றுள்ள மலேசியப் பூப்பந்து நாயகன் டத்தோ மிஸ்புன் சிடேக், தமிழகத்தின் திருத்தங்கலில் உள்ள ஹட்சன் பூப்பந்து மையத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளார்.

இரண்டே வாரங்களில் அவர் விரைவாக அங்குள்ள கலாச்சாரத்தையும் சவால்களையும் ஏற்றுக்கொண்டுள்ளார்.

ரமலான் நோன்புத் தொடங்கியிருக்கும் நிலையில், நான் ரொட்டி, சப்பாத்தி, தோசை, காரமான கறி போன்ற இந்திய உணவுகளுடன் அவர் நோன்பு துறக்கிறார்.

கூடவே, நம்மூர் தே தாரேக் பானமும் அவருக்கு கைக்கொடுக்கிறது.

ஆனால், அவரது கடுமையான பயிற்சி முறைகள் மட்டும் மாறவில்லை.

சுமார் 100 வீரர்கள் தங்கியுள்ள பூப்பந்து மையத்தில் அதிகாலை 5 மணிக்கே பயிற்சி தொடங்குகிறது. ஒரு நாளில் இரு முறை பயிற்சி நடைபெறுகிறது.

ஆரம்பத்தில் அதிர்ச்சியடைந்த வீரர்கள், இப்போது அவரது out-of-the-box அணுகுமுறைகளை மதித்து கற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

“நான் குறிப்புகள் படி அல்ல, இதயத்திலிருந்து பயிற்சி அளிக்கிறேன். கலாச்சாரம் வேறுபட்டாலும், ஆர்வம் ஒன்றே” என தனக்கே உரிய பாணியில் கூறுகிறார் ஜாம்பவான் மிஸ்புன்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!