மலேசியா
செகாமாட் கால்வாயில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் மீட்பு

செகாமாட், பிப்ரவரி-21,
ஜோகூர் செகாமாட்டில், கம்போங் தெங்கா அருகே சாலை சமிக்கை விளக்குப் பகுதியில் உள்ள கால்வாயில் அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நேற்று காலை சுமார் 11.40 மணியளவில் பொது மக்களால் அது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீஸ் கூறியது.
இறந்தவர் சுமார் 60 வயது மாதுவாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது.
ஆனால் அவரது அடையாளம் இன்னும் உறுதிச் செய்யப்படவில்லை.
இச்சம்பவத்தில் குற்ற அம்சங்கள் இருப்பதற்கான வெளிப்படையான அடையாளங்கள் எதுவும் இல்லை என்றும் போலீஸ் தெரிவித்துள்ளது.
மரணத்திற்கான காரணத்தை கண்டறியவும், அவரது அடையாளத்தை உறுதிச் செய்யவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.



