மலேசியா

குவாலா பிலாவில், ‘டின் திறப்பானால்’ தாயை குத்திய பெண் கைது

குவாலா பிலா, பிப்ரவரி 21 — நெகிரி செம்பிலான் குவாலா பிலா ஜோஹோல் (Johol) அருகிலுள்ள கம்போங் செகினேஹ் இனாஸ் (Kampung Segineh Inas) பகுதியில், தனது சொந்த தாயை கழுத்தில் குத்தியதாக சந்தேகிக்கப்படும் 50 வயதுடைய பெண்ணை போலீசார் நேற்று கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணைகளில் குற்றச்சாட்டுக்குட்பட்ட பெண் கூர்மையான பொருளைப் பயன்படுத்தி தனது தாயை தாக்கியிருக்கின்றாள் என்று குவாலா பிலா மாவட்ட போலீஸ் தலைவர் முஸ்தாபா ஹுசின் (Mustafah Hussin) தெரிவித்துள்ளார். அது டின் திறப்பான் அதாவது can opener ஆக இருக்கலாம் என போலீசார் மேலும் சந்தேகிக்கின்றனர்.

கழுத்தில் காயமடைந்த 80 வயதுடைய தாய் உடனடியாக ரெம்பாவ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தற்போது அவர் சீரான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு மனநலப் பிரச்சினைகள் இருக்கக்கூடும் என போலீசார் கூறினாலும், சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கு மலேசிய தண்டனைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் தகவல் தெரிந்தவர்கள் குவாலா பிலா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!