சியாங் மை புலி பூங்காவில் 72 புலிகள் மரணம்; விசாரணை தொடக்கம்

சியாங் மாய், பிப்ரவரி-21,
தாய்லாந்தின் சியாங் மாயில் 72 புலிகள் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 8 முதல் 19 வரை, இரண்டு தனியார் புலி பூங்காக்களில் முறையே 21 புலிகளும் 51 புலிகளும் மாண்டன.
புலிகள், canine distemper virus கிருமி மற்றும் நுரையீரலைத் தாக்கும் பாக்டீரியா காரணமாக பாதிக்கப்பட்டதாக விலங்கியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
சியாங் மாய் பல்கலைக்கழக விலங்கியல் மருத்துவத் துறைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன.
இதில் Mae Rim Tiger Kingdom தற்காலிகமாக 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.
இப்பூங்கா, வருகையாளர்கள் அருகிலிருந்து புலிகளைக் காண்பதில் உலகப் புகழ்பெற்றதாகும்.
புலிகளிடையே நோயை கண்டறிவது வீட்டுப் பிராணிகளைக் காட்டிலும் கடினம் என்பதால், தொற்று பரவலை தடுக்க முடியாமல் போய்விட்டதை மருத்துவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம், தாய்லாந்தின் வனவிலங்கு சுற்றுலா துறையில் விலங்கு நலன் மற்றும் நோய் கட்டுப்பாடு குறித்த கேள்விகளை எழுப்பியுள்ளது.
விசாரணைத் தொடரும் நிலையில், விலங்கு நல ஆர்வலர்கள், இத்துயரச் சம்பவம் தாய்லாந்தின் புலி சுற்றுலா துறையை மாற்றக்கூடும் என எச்சரிக்கின்றனர்.



