Latestஉலகம்விளையாட்டு

16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலக சாம்பியனான ஸ்பெயின்; கலைந்த மெஸ்சியின் கனவு

நியூ யோர்க், ஜூலை-20-16 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் உலகக் கிண்ணத்தை வென்று கால்பந்து அரங்கில் ஸ்பெயின் மகுடம் சூடியுள்ளது.

அமெரிக்கா, நியூ யோர்க்கில் நடைபெற்ற பரபரப்பான இறுதியாட்டத்தில் அர்ஜேண்டினாவை 1-0 என வீழ்த்தி, La Roja (spelled as *La Roha*) என அழைக்கப்படும் அவ்வணி இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தைத் தட்டிச் சென்றது.

90 நிமிட முழு நேர ஆட்டத்தின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில், ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில் அர்ஜேண்டினா அணி கடும் நெருக்கடியைச் சந்தித்தது.

அதாவது, ஆட்டத்தின் இறுதி நேரத்தில் Enzo Fernandes சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டதால், அர்ஜேண்டினா 10 வீரர்களுடன் விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதனை நன்கு பயன்படுத்திக் கொண்ட ஸ்பெயின்
கூடுதல் நேரத்தின் 106-வது நிமிடத்தில் Ferran Torres மூலம் வெற்றிகோலைப் புகுத்தியது.

இந்த ஒற்றைக் கோல் ஸ்பெயின் அணிக்கு 1-0 என்ற கணக்கில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தந்தது.

இந்த உலகக் கிண்ணம் தொடங்கியதிலிருந்து அதிரடி காட்டி வந்த அர்ஜேண்டினா கேப்டன் லியோனல் மெஸி இன்றைய இறுதியாட்டத்தில் சோபிக்கத் தவறி, பெருத்த ஏமாற்றத்தை அளித்தார்.

இதனால் தொடர்ந்தாற்போல் இரண்டாவது முறையாக உலகக் கிண்ணத்தை வெல்லும் அர்ஜேண்டினா இரசிகர்களின் கனவுக் கலைந்தது.

ஆட்டத்தின் இறுதி விசிலின் போது, ஸ்பெயின் வீரர்கள் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி ஆர்ப்பரித்தனர்.

ஆனால், அர்ஜேண்டினாவின் Leandro Paredes எதிரணி வீரரை முரட்டுத்தனமாகத் தாக்கியதால் சிறிது மோதல் போக்கு நிலவியது.

என்றாலும், ஸ்பெயினின் வெற்றிக் கொண்டாட்டத்தைத் தடுக்க முடியவில்லை.

ஸ்பெயின் அணிக்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப் உலகக் கிண்ணத்தை எடுத்து வழங்கினார்.

இதனிடையே, இத்தொடரில் பிரான்ஸ் கேப்டன் கிளியன் எம்பாப்பே 10 கோல்களை அடித்து ‘தங்கக் காலணி’ விருதை வென்றுள்ளார்; இறுதியாட்டத்தில் கோல் அடிக்கத் தவறிய மெஸி 8 கோல்களுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

இந்த 10 கோல்களையும் சேர்த்து உலகக் கிண்ண வரலாற்றில் ஆக அதிமாக அதாவது 22 கோல்களை அடித்த வீரர் என்ற மற்றொரு முக்கியச் சாதனையையும் எம்பாப்பே படைத்துள்ளார்.

இவ்வேளையில், இந்த 2026 உலகக் கிண்ணப் போட்டி முழுவதும் சிறப்பாக விளையாடியதற்காக ஸ்பெயின் கேப்டன் Rodri ‘தங்கப் பந்து’ விருதை வென்றார்.

ஸ்பெயினின் இந்த வெற்றியோடு ஒரு மாத கால உலகக் கால்பந்து திருவிழா ஒரு முடிவுக்கு வந்துள்ளது.

அடுத்து 2030-ஆம் ஆண்டு நூற்றாண்டு விழாவாக 3 கண்டங்கள் மற்றும் 6 நாடுகளில் உலகக் கிண்ணப் போட்டி நடைபெறும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!