Latestமலேசியா

வெறுப்புப் பேச்சும் இனவாத அரசியலும் ஏன் அதிகரிக்கிறது? – பின்னணியைப் புரிந்துகொள்ளுங்கள்

கோலாலம்பூர்-சமூக ஊடகங்களில் வெறுப்புப் பேச்சு, இன மற்றும் மத உணர்வுகளைத் தூண்டும் பதிவுகள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதை பலரும் கவனித்திருப்பார்கள். இது குறிப்பாக ஏன் தற்போதைய மடானி அரசாங்கத்திற்கு எதிராக நடக்கிறது எனும் கேள்விக்கு முன்னாள் பத்திரிகை ஆசிரியரும் அரசியல் தொடர்பாடல் ஆலோசகருமான மார்ட்டின் வெங்கடேசன் தனது பகுப்பாய்வில் முக்கிய விளக்கத்தை முன்வைத்துள்ளார்.

மலேசிய அரசியல் போட்டி அதிகரிக்கும் காலங்களில், சில அரசியல் தரப்புகள் மக்களின் கவனத்தை பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவு போன்ற பிரச்சினைகளிலிருந்து இனம், மதம் மற்றும் அடையாள அரசியலுக்குத் திருப்ப முயல்கின்றன. இதுபோன்ற செய்திகளே சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவி, அதிக எதிர்வினைகளையும் பெறுகின்றன என மார்டின் கூறுகிறார்.

உணர்ச்சியைத் தூண்டும் பதிவுகளை சமூக ஊடக நிறுவனக்களின் algorithm மேலும் பலரிடம் கொண்டு சேர்ப்பதும், ஒருங்கிணைந்த இணையப் பிரசாரங்கள் மற்றும் போலித் தகவல்கள் இந்தச் சூழலை தீவிரப்படுத்துவதும் கவலைக்குரியதாக அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதன் விளைவாக, அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் குறிப்பாக தேர்தல் காலங்களில் இன அல்லது மதக் கண்ணோட்டத்தில் பார்க்கப்படும் மனநிலையை உருவாகிறது.

இது சமூக ஒற்றுமையை பாதிப்பதோடு, மக்களிடையே தேவையற்ற சந்தேகங்களையும் பிரிவினையையும் உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரிக்கிறார்.

எனவே, சமூக ஊடகங்களில் பகிரப்படும் தகவல்களை உடனே நம்பாமல், அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தி, பல்வேறு நம்பகமான செய்தி மூலங்களுடன் ஒப்பிட்டு பார்ப்பதே பொறுப்பான குடிமக்களின் அணுகுமுறையாகும்.

உண்மையை அடிப்படையாகக் கொண்ட விவாதங்களே ஆரோக்கியமான ஜனநாயகத்தையும் சமூக நல்லிணக்கத்தையும் வலுப்படுத்தும் என்றார் அவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!