Latestமலேசியா

சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்தில் இருந்து விழுந்த இருவர் சடலமாக மீட்பு

பாகான் டத்தோ, ஜூலை-19-பேராக், பாகான் டத்தோவில் உள்ள சுல்தான் நஸ்ரின் ஷா பாலத்திலிருந்து சுங்கை பேராக் ஆற்றில் விழுந்து காணாமல் போயிருந்த இருவரது உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

​வெள்ளிக்கிழமை, தனித்தனி சம்பவங்களாக பாலத்திலிருந்து ஆற்றில் விழுந்த 42 வயது Nor Ferdaus Mokhtar மற்றும் 2 வயது சிறுவன் Wong Long Hee ஆகியோரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.

Nor Ferdaus​-ஸின் உடல் பாலத்திலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவிலும், சிறுவனது உடல் 10 கிலோ மீட்டர் தொலைவிலும் மீட்கப்பட்டதாக பாகான் டத்தோ மாவட்ட போலீஸ் கூறியது.

​இந்தச் சோகமான சம்பவத்தில், ஏற்கனவே சிறுவனின் தாயாரான 38 வயதான Lim Li Yin உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டது.

மீட்கப்பட்ட உடல்கள் அனைத்தும் சவப் பரிசோதனைக்காக தெலுக் இந்தான் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

இது குறித்த மேல் விசாரணைகளைப் போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!