Latestமலேசியா

மலாயா பல்கலைக்கழகத்தில் ‘இந்து நாடக சபா 3.0’ வெற்றி; ‘அடேங்கப்பா அரண்மனையில் அவள்’ நாடகம் இரசிகர்களைக் கவர்ந்தது

பெட்டாலிங் ஜெயா, ஜூலை-19-மலாயா பல்கலைக்கழகத்தின் இந்து சங்கமான PHUM ஏற்பாடு செய்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ‘இந்து நாடக சபா 3.0’ மேடை நாடக நிகழ்வு, நேற்று சனிக்கிழமை பல்கலைக்கழகத்தின் Experimental Theatre அரங்கில் மிக வெற்றிகரமாக அரங்கேறியது.

இளையத் தலைமுறையினரிடையே மறைந்து வரும் பாரம்பரியக் கலைகள், இந்து மதக் கலாசாரம் மற்றும் மரபுகளை மேடை நாடகக் கலை வடிவில் கொண்டு சேர்க்கும் உன்னத நோக்கத்தோடு இந்தத் திட்டம் அரங்கேற்றப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் திஷால் ராஜ் கணேசன் மற்றும் நாடக ஆசிரியர்-இயக்குநர் தினேஸ்வரன் அனதராஜா ஆகியோரின் கூட்டுப் படைப்பில், ‘அடேங்கப்பா அரண்மனையில் அவள்’ என்ற தலைப்பில் இந்த நாடகம் மிக பிரம்மாண்டமாகப் படைக்கப்பட்டது.

நிகழ்வின் நோக்கம் குறித்து வணக்கம் மலேசியாவிடம் பேசினார் திஷால் கணேசன்…

இந்தத் தயாரிப்பின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் தங்களின் நடிப்பு, இயக்கம் மற்றும் திரைக்கதை எழுதும் ஆற்றலை வெளிப்படுத்த நல்வாய்ப்பு அமைந்ததாகவும் அவர் சொன்னார்.

இந்நிகழ்வுக்குப் ‘பஞ்சா’ நிறுவனத்தின் இயக்குநர் கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட வேளை, மலேசியக் கலைத்துறையின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் திரளாகக் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

மேலும், வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் ‘இரும்புத் தோட்டம்’ (Irumbu Thottam) திரைப்படக் குழுவினரும் இதில் கலந்துகொண்டு தங்களின் விசேஷத் திரைப்பட விளம்பரப் பிரச்சாரத்தை மேற்கொண்டனர்.

கலை, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் இந்த ‘இந்து நாடக சபா 3.0’ நிகழ்வு, பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!