Latestமலேசியா

ஜாலான் துன் ரசாக்கில் மரங்கள் சரிந்து விழுந்த விபத்து; ஒருவர் பலி, 7 பேர் காயம்

கோலாலம்பூர், ஜூலை-19-கோலாலம்பூரில் நேற்றிரவு நிகழ்ந்த துயரச் சம்பவத்தில், ஜாலான் துன் ரசாக் சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.

மேலும் 7 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் சிங்கப்பூர் தூதரகத்திற்கு அருகில் இரவு சுமார் 10.20 மணியளவில் நிகழ்ந்தது.

​2 வாகனங்கள் மீது மரங்கள் சரிந்து விழுந்ததில், மொத்தம் 8 பேர் உள்ளே சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் முதல் காரின் 43 வயது ஓட்டுநர், கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மற்றொரு வாகனத்தில் பயணம் செய்த 2 சிறுவர்கள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் மற்றும் கோலாலம்பூர் மாநகர மன்ற ஊழியர்கள், கடும் போராட்டத்திற்குப் பிறகு வாகனங்களில் சிக்கியவர்களை மீட்டு, நள்ளிரவு 12 மணியளவில் சாலைப் போக்குவரத்தை சீரமைத்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!