Latestஇந்தியா

“முதல்வர் ஜோசப் விஜய்க்கு நன்றி” – வாழ்த்து சொல்லி நெகிழ்ந்த நடிகர் அஜித் குமார்

தமிழகம், செப்-04-தமிழகத்தில் அனைத்துலகத் தரத்திலான ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கப்படும் என முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் அறிவித்துள்ளதற்கு நடிகரும், கார் பந்தய வீரருமான அஜித் குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும், தமிழக அரசின் முயற்சிக்கும் முன்னெடுப்புக்கும் அவர் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் நன்றியையும் கூறி நெகிழ்ந்தார்.

தமிழக இளைஞர்களை விளையாட்டின் பக்கம் ஈர்த்து, அவர்களின் திறமைகளை கண்டறிந்து முறையாக வளர்ப்பதற்கான தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை. குறிப்பாக, ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’ அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தமக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாக அஜித் குமார் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்.

மோட்டார் விளையாட்டுத் துறையின் முக்கியத்துவத்தை சுட்டிக் காட்டிய அவர், விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்கின் புகழ்பெற்ற வார்த்தைகளை மாற்றி, “One small step by the Tamilnadu Government, one giant leap for Indian Motor Sports” என தெரிவித்துள்ளார். இது இந்திய மோட்டார் விளையாட்டுத் துறை வளர்ச்சிக்கு தமிழக அரசு மேற்கொண்டு வரும் முன்னெடுப்புக்கு மிகப் பெரிய உத்வேகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

தமிழகத்தில் அமையவுள்ள ‘மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி’யில் அனைத்துலகத் தரத்திலான பந்தய ஓடுதளம் உருவாக்கப்பட உள்ளது. ஃபார்முலா 1, F2, F3, F4 உள்ளிட்ட அனைத்துலக அளவிலான கார் பந்தயங்களை நடத்தும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்படுவதுடன், இளம் வீரர்களின் திறமைகளை கண்டறிந்து தேசிய மற்றும் அனைத்துலகப் போட்டிகளுக்கு தயார்படுத்தும் பிரத்தியேக பயிற்சி வசதிகளும் அமைக்கப்படும்.

இந்த முன்னெடுப்பின் மூலம் தமிழ்நாட்டை அனைத்துலக மோட்டார் பந்தயங்களின் முக்கிய மையமாக மாற்றுவதுடன், விளையாட்டு மற்றும் சுற்றுலாத்துறைகளிலும் வளர்ச்சியை ஏற்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், மோட்டார் விளையாட்டு மற்றும் ஆட்டோமொபைல் துறைகளின் வளர்ச்சிக்கும் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!