Latestமலேசியா

பொருளாதார நிலை அனுமதித்தால் STR மற்றும் SARA உதவித் தொகை உயர்த்தப்படும் – பிரதமர் அன்வார்

ஈப்போ, ஜூலை-20-நாட்டின் பொருளாதாரம் அனுமதிக்கும் பட்சத்தில், STR ரொக்க உதவி மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கான SARA உதவித் திட்டங்களின் கீழ் வழங்கப்படும் நிதியை அதிகரிக்க அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருவதாகப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்துள்ளார்.

ஈப்போவில் நடைபெற்ற ‘மடானி Kita’ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், வரவிருக்கும் 2027 பட்ஜெட்டில் இது குறித்துப் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

பொது மக்கள் மீதான நிதிச் சுமையைக் குறைக்கும் வகையில் இந்த நலத்திட்டங்களை மேலும் விரிவுபடுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது என்றார் அவர்.

இதனிடையே, நாட்டின் பாதுகாப்பு மற்றும் பேரிடர் காலங்களில் முக்கியப் பங்காற்றும் RELA தொண்டூழியப் படையினரின் நலனைக் காக்கும் வகையில், இவ்வாண்டும 3 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!