
ஜோகூர் பாரு, ஜூலை-20-ஜோகூர் பாருவில் நடைபெற்ற 12 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்து போட்டியின்போது, 12 வயது சிறுவன் ஒருவன் எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உயிரிழந்த சிறுவன் Danish Hizqeel Mohd Hanif என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இவர் பாசீர் கூடாங், தாமான் ரிந்திங் டுவா தேசியப் பள்ளியில் பயின்று வந்தார்.
தனது 8 வயதிலிருந்தே Shining FC என்ற கிளப்பில் கால்பந்து பயிற்சி பெற்று வந்த இவர், மிகவும் சுறுசுறுப்பான மற்றும் திறமையான வீரர் என்று பயிற்சியாளர்களால் புகழப்படுகிறார்.
சம்பவம் நடந்த இடத்தை உறுதிப்படுத்திய தென் ஜோகூர் பாரு போலீஸ், இது திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
வளர்ந்து வந்த திறமையாளரான Danish- ஷின் மறைவு, ஜோகூர் கால்பந்து சமூகத்திற்கு ஒரு பேரிழப்பாகக் கருதப்படுகிறது.
ஜோகூர் பாரு கால்பந்து சங்கம் மற்றும் மாநில கல்வி இலாகாவின் விளையாட்டுப் பிரிவு ஆகியவை சிறுவனின் குடும்பத்திற்குத் தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளன.



