
கோலாலம்பூர், பிப்ரவரி-22-ஊழியர் சேமநிதி வாரியமான EPF, 2025-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவாக 6.3 விழுக்காட்டை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சில பொருளாதார நிபுணர்கள், இது 6.5 விழுக்காடு வரை உயரலாம் எனவும் கூறுகின்றனர்.
2024-ஆம் ஆண்டுக்கான இலாப ஈவாக 6.3% அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்தாண்டின் முதல் 9 மாதங்களில் EPF-பின் முதலீட்டு வருமானம் 11 விழுக்காடு அதிகரித்துள்ளது.
உலக பங்குச் சந்தை மீட்சியும், திறமையான சொத்து ஒதுக்கீடும் இதற்கு காரணம் என அவர்கள் கூறுகின்றனர்.
அவ்வகையில், Conventinal எனப்படும் சாதாரண சேமிப்பாளர்கள் அதிக பலன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம், இஸ்லாமிய ஷாரியா சேமிப்புகள் சிறிது மாறுபடலாம்.
காரணம்… இஸ்லாமிய பங்கு பரிவர்த்தனை பலவீனமாக செயல்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக் காட்டினர்.
இந்த உயரிய இலாப ஈவுத் தொகை சந்தாத்தாரர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தக் கூடும்.
அதே சமயம் மூன்றாவது கணக்கான Akaun Fleksibel மூலம் பணம் எடுத்தாலும், EPF-பின் மொத்த வலிமை பாதிக்கப்படாது என அவர்கள் கருதுகின்றனர்.
ஆக, புத்தாண்டில் EPF உறுப்பினர்கள், வளர்ச்சியும் நிலைத்தன்மையும் இணைந்த நம்பகமான வருமானத்தை எதிர்பார்க்கலாம்.
இம்மாத கடைசிக்குள் அல்லது மார்ச் தொடக்கத்தில் EPF அதன் இலாப ஈவை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



