Latestமலேசியா

எண்ணெய் நிலையத்தில் பூட்டியக் காருக்குள் சடலமாகக் கிடந்த பெண்

ஜோர்ஜ்டவுன், பிப்ரவரி-23-பினாங்கு, Jalan Paya Terubong எண்ணெய் நிலையத்தில் நிறுத்தியிருந்த தனது காருக்குள் 38 வயது பெண் ஒருவர் நேற்றிரவு இறந்துகிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.

உள்ளிருந்து பூட்டப்பட்ட Perodua Myvi காரைத் திறப்பதற்காகத் தான் முதலில் தீயணைப்பு – மீட்புத் துறையினருக்கு தகவல் சொல்லி விடப்பட்டது.

ஆனால் அவர்கள் வந்து பார்த்த போது காருக்குள் அம்மாதுவுக்குச் சொந்தமான ஏராளமான பொருட்கள் அடைத்துக் கொண்டிருந்தன.

துணிமணிகள், தலகாணி, அட்டைப் பெட்டி, பை, உணவுகள் மற்றும் சில போதைப்பொருட்களும் அவற்றிலடங்கும்.

இதனால் கார் கதவைத் திறப்பதில் சிரமம் ஏற்பட்டது.

கடைசியாக பின்பக்க கண்ணாடியை உடைத்தபோது, ஓட்டுநர் இருக்கையில் அம்மாது சடலமாகக் கிடந்தார்.

மேல் நடவடிக்கைக்காக சடலம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இவ்வேளையில், மரணமடைந்த தனது மகள் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என அப்பெண்ணின் தாயார் கூறினார்.

காருக்குள்ளேயே தங்குவது போல கற்பனை செய்துகொண்டு, ஏராளமான உடமைகளை அவர் உள்ளே வைத்திருந்தார்; ஆனால், தினமும் இரவு எப்படியாவது வீடு திரும்பி விடுவார்; இன்று திரும்பாமலேயே எங்களை விட்டுச் சென்று விட்டார் என அவர் சோகத்துடன் சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!