
கோலாலம்பூர், பிப்ரவரி-26-கோலாலம்பூர், ஜாலான் கெந்திங் கிள்ளானில் ஓர் அலுவலகத்தில் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில், வெளிநாட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்ததார்.
44 வயது அந்த பாகிஸ்தான் ஆடவர், அலுவலகத்தில் கண்ணாடி பலகைகளை அகற்றும் பணியில் இருந்தபோது, அவற்றில் ஒன்று உடைந்து அவரது கையை வெட்டியது.
இதனால் கடுமையான இரத்தப்போக்கு ஏற்பட்டு அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
போலீஸ் இச்சம்பவத்தை திடீர் மரணம் என வகைப்படுத்தியுள்ளது.
எனினும், துல்லியமான காரணத்தை அறிய சடலம் சவப்பரிசோதனைக்காக கோலாலம்பூர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.



