Latestமலேசியா

கூச்சிங்கில் பூனையைக் கொன்ற ஆடவருக்கு 11 மாத சிறை

கூச்சிங், பிப்ரவரி-26-சரவாக், கூச்சிங்கில் ஒரு பூனையை கொடூரமாக அடித்து கொன்ற 38 வயது ஆடவருக்கு 11 மாதங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் கடந்த டிசம்பர் 30-ஆம் தேதி, 24 மணி நேரம் செயல்படும் சலவைக் கடையில் நிகழ்ந்தது.

CCTV காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி, அப்போது மக்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தனர்.

பின்னர் ஜனவரி 1-ஆம் தேதி அவர் கைதுச் செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட அவர், அருகில் இருந்த மற்றொரு பூனை தம்மைக் கடித்ததால், கோபத்தில் தாம் அவ்வாறு நடந்துகொண்டதாக கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!