
மலாக்கா, பிப்ரவரி 27 – மலாக்கா தெங்கா பகுதியில் உள்ள ஒரு பள்ளி அருகே, 12 வயது மாணவி ஒருவர் பாலியல் தொல்லைக்கு உள்ளான நிலையில் புதருக்குள் அரை நிர்வாண நிலையில் கிடந்தபடி நேற்று மாலை கண்டுபிடிக்கப்பட்டார்.
மதியத்திற்குப் பிறகு நடைபெறும் கூடுதல் வகுப்பிற்கு மாணவி வராததை ஆசிரியர்கள் கவனித்தனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளில், மதியம் சுமார் 12 மணியளவில் மாணவி பள்ளியை விட்டு வெளியேறியிருப்பது தெரியவந்தது.
மாணவி, தன் தாயின் வாகனம் என நினைத்து ஒரு வாகனத்திற்குள் நுழைந்ததாகவும், அது அந்நிய நபரின் வாகனம் என்பதை உணர்ந்ததும் அச்சத்தில் ஓடிச் சென்று புதருக்குள் மறைந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. பின்னர் அந்த ஆடவன் அவரைக் கண்டுபிடித்து உடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தி, கைப்பேசியில் புகைப்படங்கள் எடுத்து தப்பிச் சென்றுள்ளான்.
மாலை சுமார் 7 மணியளவில் குடும்பத்தினர் மற்றும் தேடுதல் குழுவினர் மாணவியை கண்டுபிடித்து மலாக்கா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
12yearold, student, sexually, assaulted, Malacca,



