
காபுல், பிப் 27 – பாகிஸ்தான் எல்லைப் படையினர் மீது ஆப்கானிஸ்தான் படைகள் தாக்குதல் நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, இன்று ஆப்கானிஸ்தானின் காபுல் மற்றும் காந்தஹார் ( kandahar) நகரங்கள் மீது பாகிஸ்தான் குண்டுவீச்சு தாக்குதலை நடத்தியது.
இதற்கு முன்பு நடந்த மோசமான வான்வழித் தாக்குதல்களுக்கு இதுவொரு பதிலடி என்று தலிபான் அரசாங்கம் கூறியது. எல்லை வன்முறையில் டஜன் கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டதாக இரு ராணுவத்தினரும் தெரிவித்தனர்.
ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் நடத்திய பல தாக்குதல்கள் மற்றும் அண்மைய மாதங்களில் எல்லையில் நடந்த மோதல்களைத் தொடர்ந்து பதிலடி நடத்தப்பட்டதாக ஆப்கானிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
காபுல் , பாக்டியா மாநிலம் மற்றும் காந்தஹாரில் ஆப்கானிஸ்தான் தாலிபான் தற்காப்பு இலக்குகள் குறிவைக்கப்பட்டதாக பாகிஸ்தான் தகவல் அமைச்சர் அத்தவ்லா தாரார் ( Attaulah Tarar ) X தளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இரண்டுமணி நேரத்திற்கும் மேலாக ஜெட் விமானங்கள் பறக்கும் சத்தம் மற்றும் பலத்த குண்டுவெடிப்பு சத்தங்களைக் கேட்டதாகவும் அதைத் தொடர்ந்து துப்பாக்கிச் சூடுகளும் நடந்ததாக AFP செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் வான்வழித் தாக்குதல்களை தலிபான் அரசாங்கம் உறுதிப்படுத்தியதோடு எந்த உயிரிழப்பும் இல்லையென செய்தி தொடர்பாளர் Zabilhullah Mujahid கூறினார்.



