Latestமலேசியா

இஸ்லாம் மற்றும் பூமிபுத்ரா பிரச்னைகள் குறித்து பல கட்சி கூட்டத்தை நடத்திய அம்னோ

கோலாலம்பூர், மார்ச்-6-மலாய்-முஸ்லீம் அரசியல் கட்சிகளை ஒரு பெரியக் குடையின் கீழ் இணைக்கவிருப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்த அம்னோ, தொடக்கக் கட்டமாக பல கட்சி கூட்டத்தை நடத்தியுள்ளது.

நேற்று அம்னோ தலைமையகத்தில் நடைபெற்ற அக்கூட்டத்தில் இஸ்லாம் மற்றும் பூமிபுத்ரா மக்களின் பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டன.

இந்த சந்திப்பில், அம்னோவோடு, பாஸ், பி.கே.ஆர், அமானா, பெர்ஜாசா, கிம்மா, PGRS, IKATAN என அரசாங்க மற்றும் எதிர்கட்சிக் கூட்டணிகளைச் சேர்ந்த 8 கட்சிகள் பங்கேற்றன.

அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ Asyraf Wajdi Dusuki கூட்டத்திற்குத் தலைமையேற்றார்.

இஸ்லாம் மற்றும் பூமிபுத்ரா சமூகங்கள் தொடர்பான முக்கிய பிரச்னைகள் குறித்து தொடர்ந்து கலந்துரையாடுவதற்காக, ஒரு நிரந்தர செயலகத்தை அமைக்கவும் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

கருத்து வேறுபாடுகளைத் தாண்டி பல கட்சிகள் ஒரே மேடையில் கலந்துகொண்ட இந்த சந்திப்பு, அரசியல் ரீதியாக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!